கருப்பு பேட்ஜ் அணிந்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்
தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணைத்தலைவர் அருண்காந்தி தலைமை தாங்கினார். கல்லூரி கிளை செயலாளர் நரேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். எழுத்துத் தேர்வு முறையை கைவிட வேண்டும். சட்டக்கல்லூரிகளில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாநில தகுதித்தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story