இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்புலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணை செயலாளர் கண்ணகி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக் கோரியும், நன்னடத்தை விதிகளை மீறிய குஜராத் அரசை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் ஜெயா, மாதர் சங்க நிர்வாகிகள் நூர்ஜகான், பஞ்சவர்ணம், பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.