உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x

உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருவாரூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. திருவாரூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட தலைவர் சாந்தகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல ஊராட்சிகளில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. 7-வது ஊதிய நிலுவைத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. ஊதிய பாக்கியும் நிலுவையில் உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சம்மேளன நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






Next Story