உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
x

உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது அலிஜின்னா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மோட்டார் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story