மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வாகையடி முக்கில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டப்பஞ்சாயத்து, காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் ரமேஷ் ஆகியோர் பேசினார்கள். இதில் தென்காசி மாவட்ட செயலாளர் அய்யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story