பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓமலூர்:-
ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைத்தலைவர் பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் அர்த்தனாரி, துணைச் செயலாளர் மோகன், துணைத் தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் தங்கவேல், ராஜரத்தினம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர்.