ஓய்வூதியா் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியா் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் சார்பில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், ராசமாணிக்கம், இணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத்தலைவர் வீரமணி வரவேற்றார்.
வட்டச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் நடராசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளா், ஊராட்சி எழுத்தா் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட பொருளாளா் விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story