மக்கள் நலன்காக்கும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடன்குடியில் மக்கள் நலன்காக்கும் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி அலுலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கும் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செந்தூரில் மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், உடன்குடியில் பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நகர நிர்வாகிகள் காசிலிங்கம், மகாராஜன், முருகேசன், அப்துல்ரகுமான், மாநில துணைத்தலைவர் மனோகரன், மாநில பொதுச்செயலர் க.முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story