வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ேநற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநிலத்தலைவர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதிய படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும். 2021-2022 ஆண்டுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட விஏஓ பதவி உயர்வு உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.