ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டியு. மாவட்ட செயலாளர் சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.என்.எல் கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும். டெங்கு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதி படி தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கரிகாலன், சிவலிங்கம், குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக உள்ளாட்சித் துறை சங்க முசிறி கிளை பொறுப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.