வடலூரில் சன்மார்க்க சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வடலூரில்    சன்மார்க்க சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் சன்மார்க்க சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


வடலூர்,

வடலூர் பஸ்நிலையத்தில் சன்மார்க்க சங்கங்களின் சார்பில் வடலூரில் மது, மாமிச கடைகளை அகற்றி புனித நகரமாக அறிவிக்க கோரியும், வள்ளலார் குறித்து அவதூறான கருத்தை பேசிய திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த நிர்வாகியை கைது செய்ய வேண்டும், வடலூர், மருதூர் மேட்டுக்குப்பம், கருங்குழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சன்மார்க்க சங்க தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். சன்மார்க்க சங்க தலைவர் விழுப்புரம் அண்ணாமலை பிரதேசி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை சாது ஜானகிராமன், சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த பாபு, புதுச்சேரி குஞ்சிதபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story