தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

வந்தவாசியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர் பி.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வே.முத்தையன், மாவட்ட செயலாளர் இரா.தங்கராஜ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் ஆ.ரஹ்மத்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் ஆ.ஆரிப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதியை குறைத்து, அந்த திட்டத்தை மத்திய அரசு சீர்குலைப்பதாக புகார் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, மகளிர் அணி செய்யாறு பி.ஆயிஷா, விஜயா, எஸ்.மலர், வி.நாராயணன், டி.எம்.ரசூல், ஆர்.அசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story