விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரையூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி தாலுகா மறவாமதுரை வட்டம், உடையாம்பட்டி, மங்கனூரில் 10 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையை உடனடியாக தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்த நபரை அப்புறப்படுத்தி அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி உடையாம்பட்டி, மங்கனூர் கிராம மக்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு ஆவன செய்ய வேண்டும். கொன்னையம்பட்டியில் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டதால் மின் இணைப்பு பெற முடியாமல் 3 மாதங்களாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் வெள்ளைக்கண்ணு என்பவருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் விவசாய சங்க தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.