கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங்கை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில்குமார், கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் உத்தண்டராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லட்சுமணன், ஜெய் பீம் அறக்கட்டளை தலைவர் தாவீது ராஜா, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு மேரிஷீலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story