மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கம்மாபுரத்தில், வருகிற 4-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கடலூர்

கடலூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மையக்குழு கூட்டம் சூரப்ப நாயக்கன்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், உதயகுமார், கருப்பையன், ரவிச்சந்திரன், ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடலூர் ஒன்றியம் ராமாபுரம், சாத்தங்குப்பம், ஒதியடிக்குப்பம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்ட 2 லட்சம் வாழை மரங்கள் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் அடியோடு சாய்ந்து உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலைவாய்ப்பு, மாற்று இடத்திற்கான பட்டா மற்றும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 3-வது சுரங்கத்திற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தை கையகப்படுத்தக்கூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் கம்மாபுரத்தில் நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் அனைத்து பகுதி விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story