மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணுவத்தில் ஒப்பந்த முறை கூடாது. அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், ராஜகுரு, நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன், பாளையங்கோட்டை முத்து சுப்பிரமணியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் குழந்தை வேல் ஆகியோர் பேசினார்கள். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனி, கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நிர்வாகிகள் சந்திரசேகர், வெங்கடாசலம், வண்ணமுத்து, சாலமோன், கனகமணி, பட்சி ராஜன், சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story