மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, ஜூன்.11-
தூத்துக்குடியில் காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக்கோரி மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சனிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கையை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட செயலாளர் மகேந்திர பிரபு பேசினார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் என்ற பெயரிலேயே காலமுறை ஊதியத்துடன் பணி வழங்க வேண்டும், அ.தி.மு.க. ஆட்சியில் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டாம் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். சங்க மாவட்ட பொருளாளர் சுசிலா நன்றி கூறினார்.