மின் கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் பங்கேற்பு


மின் கட்டண உயர்வை கண்டித்து  சேலத்தில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்  ஜி.கே.வாசன் பங்கேற்பு
x

சேலத்தில் த.மா.கா. சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம்

சேலம்,

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி, புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் செல்வம், மாநில பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், குலோத்துங்கன், பாட்சா, மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, ஆத்தூர் காளிமுத்து, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர்கள் மாயம்மா சங்கீதா, சிந்தாமணியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் எம்.பி. பேசியதாவது:-

மக்கள் மீது சுமை

தமிழக மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லாததால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படும். மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறுகிறார்கள். அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மின்சார தடவாள பொருட்கள் வாங்கும் போது ஊழல் செய்யக்கூடாது, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும்போது லஞ்சம் வாங்கக்கூடாது. இந்த பணிகளை முறையாக செய்தால் மின்சாரத்துறை நஷ்டத்தில் செயல்படாது. மக்கள் மீது சுமையை சுமர்த்துவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.

காமராஜர் ஆட்சி வேண்டும்

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைபாடு. இதுதான் திராவிட மாடலா?. தமிழகத்தில் நேர்மை, எளிமை, வெளிப்படையான காமராஜர் ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு ஜி.கே.வாசன் எம்.பி. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட நிர்வாகி காளியப்பன், மாநில இணை செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், மாநகர் பொதுச்செயலாளர் தமிழ் அய்யாவு, அஸ்தம்பட்டி விஷ்ணுகுமார், முன்னாள் கவுன்சிலர் சாந்தி, மாநகர் பொருளாளர் அங்குராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்சல்கான், இளைஞரணி தலைவர் நாகராஜ், இலக்கிய அணி தலைவர் ஓம்காரா சக்தி, மாணவரணி தலைவர் சாலமு, தொழிலாளர் அணி தலைவர் ஆட்டோ தயாளன், மண்டல தலைவர்கள் நைனாமலை, நித்தியானந்தம், நல்லுசீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story