போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விஜயகுருசாமி, பொதுச் செயலாளர் கோபி ராஜன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலியாக உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பணியாளர்கள் நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட உத்தரவுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை பொது செயலாளர்கள் ஞானபிரகாசம், செண்பக ராஜா, மாநில அமைப்பு செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story