சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு இளைஞர்களை எடுக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், புரட்சிகர இளைஞர் கழகம், இந்திய மாணவர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ரமேஷ், ஜெயராமன், பிரவீன்குமார், காஜாமொய்தீன், ராகுல், தினேஷ், பவித்ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.