கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரசாத் முன்னிலை வைத்தார். வட்டார செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கிராம நிர்வாக அலுவலரின் பதவி உயர்வு ஆறு ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை மூன்று ஆண்டுகளில் 60 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பதவி நியமனம் ஆணை பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் காலதாமதம் இன்றி பணி வரன்முறை வழங்க வேண்டும், நகர நிலவரித் திட்டக் கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.