கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:45 PM GMT)

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.வட்டச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிலுவை தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் தலைவர் ரங்கநாதன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story