கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்
விருத்தாசலம்;
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும், பதவி உயர்வு காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story