தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

தென்காசி

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் தென்காசி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சான்றிதழ் தாரர்களுக்கு எம்.எஸ்.டி.இ. பரிந்துரைத்தபடி முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு சி.பி.டி.தேர்வு ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி கிளை தலைவர் லெட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் கிளை தலைவர் ஜஸ்டின் ஜெயக்குமார் வரவேற்றார். நெல்லை மண்டல செயலாளர் டி.சேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், மாவட்ட தலைவர் திருமலை முருகன் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் கிளைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story