கடலூரில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் ஆவட்டி, சேடப்பாளையம், சங்கிலிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் கிராமப்புற 108 ஆம்புலன்சுகளை 24 மணி நேரமும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு எடுத்த தொழிலாளர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியினர் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story