பயிற்சி பெண் போலீசாருக்கு செயல்விளக்க வகுப்பு


பயிற்சி பெண் போலீசாருக்கு செயல்விளக்க வகுப்பு
x

போலீஸ் நிலையத்தில் பயிற்சி பெண் போலீசாருக்கு செயல்விளக்க வகுப்பு நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை பெண் போலீசார் 283 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியின் ஒரு கட்டமாக போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்த செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. இதற்காக பெண் போலீசார் 2 குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினருக்கு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், மற்றொரு குழுவினருக்கு தெற்கு போலீஸ் நிலையத்திலும் பயிற்சி வழங்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வழக்குகள் குறித்து விசாரித்தல், ஆவணங்கள் பராமரித்தல், போலீசாரின் பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது.


Next Story