விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூரில் விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்த மதியழகன் மகன் கவியரசன் (வயது 22). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் திருவாரூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவியரசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து பா.ஜ.க. பிரமுகர் காளிதாஸ் (27) உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

கவியரசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலைக்கு காரணமான அனைவரையும் கைதுசெய்ய வலியுறுத்தியும் திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். கவியரசன் படுகொலைக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் வக்கீல் ரஜினிகாந்த், திருவாரூர் வடக்கு மாவட்டசெயலாளர் வடிவழகன், தெற்கு மாவட்டசெயலாளர் செல்வன், மண்டல செயலாளர்கள் வேலுகுணவேந்தன், விவேகானந்தன், பெரம்பலூர் கிட்டு, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல், திருவாரூர் மாவட்டசெய்தி தொடர்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story