கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு செயல்படுத்தபடும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு செயல்படுத்தப்பட உள்ள கூட்டுக்கூடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) ரெட் ஸ்டார், ஆதித்தமிழர் பேரவை, வன வேங்கைகள் கட்சி ஆகியவை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். லோயர்கேம்ப்-மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story