அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதி செய்து தரக்கோரி  ஆர்ப்பாட்டம்
x

அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த அதிபெரமனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. கவுன்சிலர் குருசேவ் தலைமை தாங்கினார். அதிபெரமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், அங்கன்வாடி அமைக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் இழுத்தடித்தால் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நநடத்தப்படும் என்று குருசேவ் தெரிவித்தார். அதன் பின்னர் பேரூராட்சி இளநிலை அலுவலர் சீதாராமனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story