ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ரெயில் நிலையம் முன்பு இந்திய வர்த்தக தொழில் குழுமம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வணிக சங்கங்கள், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், ஆட்டோ, வேன், டாக்சி ஓட்டுனர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக நாகை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
Related Tags :
Next Story