முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி தலைவி தீப்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு பயிற்றுனர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story