கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம்
கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராதாபுரம்:
ராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கல்குவாரி எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடங்குளம் அருகே இருக்கன்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களையும், விவசாயிகளையும், குடியிருப்பு பகுதிகளையும் பாதிக்கக்கூடிய கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. கல்குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களை கிராம சாலையில் செல்ல அனுமதிக்க கூடாது. அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துபவர்களை அந்த நிலங்களில் இருந்து வெளியேறச் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.