உடன்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


உடன்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பில் உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குலசை தாஹிர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை செயலாளர் சதாம் உசேன் வரவேற்றார். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ேகாாிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொழிற்சங்க கிளை பொருளாளர் அல்தாப், கோரிக்கைகளை பற்றி விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க மாநில பொதுச் செயலாளர் முகைதீன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உடன்குடி வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ரவுத் நிஸ்தார், மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் சாகுல் ஹமீது, தொகுதி தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் பேசினர். முடிவில், உடன்குடி கிளை தலைவர் அப்துல் ஹமீது நன்றி கூறினார்.


Next Story