தூத்துக்குடியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்த்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நேற்று காலை வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் பிரைட்டர் (மாநகர்), சிவபெருமாள் (வடக்கு), மனோகரன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். அமைப்பு செயலாளர் சுந்தரராஜன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மின்கட்டண உயர்வு, அனைத்து துறைகளில் நடைபெறும் முறைகேடுகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story