தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்


தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதிகளில் 75 நாட்கள் முகாமிட்டு உள்ளனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன், சுமிதா பாரதி ஆகியோரின் ஆலோசனைப்படி சிவகிரி தாலுகா தாருகாபுரம் கிராமத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ணபிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து தேனீ வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாருகாபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரிதுரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story