நேரடி நெல் விதைப்பு கருவி குறித்து செயல்விளக்கம்
கீழப்பாவூர் வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி குறித்து செயல்விளக்கம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவியர்கள் ஜெயபாரதி, எமிமாள், அஞ்ஜனா, தீபாராணி, தேவிகா, துர்காதேவி, இலக்கியா, சந்தியா, ஆகியோர் கீழப்பாவூர் வட்டாரத்தில் முகாமிட்டு, கிராமபுற வேளாண் பணி அனுபவ திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி முதல்வர் தேரடிமணி, பேராசிரியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், ஹேமலதா மற்றும் இணைபேராசிரியர் ஆரோக்கிய ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன், பாவூர்சத்திரம் உதவி வேளாண் இயக்குனர் சேதுராமலிங்கம், வேளாண் அலுவலர் விமலாதேவி, துணை வேளாண் அலுவலர் மாரியம்மாள் ஆகியோரின் அறிவுரையின் பேரில் குலசேகரப்பட்டி ஊராட்சி, சடையப்பபுரத்தில் உள்ள விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பு கருவியின் பயன்பாடு குறித்து, செயல்முறை விளக்கம். அளித்தனர். மேலும் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் பற்றியும், அதில் ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அறிந்து கொண்டனர்.