வருவாய்த்துைற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கோத்தகிரியில் வருவாய்த்துைற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து கோத்தகிரியில் வருவாய்த்துைற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வருவதை தடுத்தி நிறுத்திய கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் அருண், ஜக்கனாரை கிராம நிர்வாக அலுவலர் மேகவர்ண பிரபாகரன் ஆகியோரை மினி பொக்லைன் டிரைவர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேம்புராஜ் (வயது 23), ராமநாதபுரத்தை சேர்ந்த தினேஷ் (23) ஆகியோர் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணி பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி சதீஷ் நாயக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் விதிமுறைகளை மீறி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி பணிகள் செய்வதை தடுக்க செல்லும் போது மிரட்டப்படுகின்றனர். பணிகளை நிறுத்தி விட்டு வந்தாலும், பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் நள்ளிரவில் அத்துமீறி இயக்குவதுடன், தடுக்க செல்லும் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, ஊழியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 20 பேர் கலந்துகொண்டனர். முடிவில் அருண் நன்றி கூறினார்.