தமிழர் உரிமை மீட்புக்களம் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் தமிழர் உரிமை மீட்புக்களம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் செய்த நபர்களை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் தமிழர் உரிமை மீட்புக்களம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்பு செயலாளர் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story