அரசு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


அரசு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் அரசு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் எஸ்.சற்குணகுமார், எம்.மகேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார், வருவாய்த்துறையின் நேரடி நியமன அலுவலக சங்க மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் திருமால், நில அளவை துறையின் மாவட்ட பொறுப்பாளர் முருகன் மற்றும் கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அதிகாரி படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் பல்வேறு அரசுத்துறை சங்கங்களை ேசர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story