இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்திய குடியரசு கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் தாலுகா கல்லேரி கிராமத்தில் தலித்துகளுக்காக வழங்கப்பட்ட 230 வீட்டுமனை பட்டாவினை அளந்து கல்நட்டும், குடியிருப்புக்கு பாதை அமைக்க வேண்டியும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம தலித் குடியிருப்பு நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ம.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விரேந்தர், சாமு புஷ்பராஜ், சின்னப்பதாஸ் மணிகண்டன், யுவராஜ், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட தலைவர் தலித்குமார் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாநில துணைத்தலைவர் ஏகாம்பரம், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சிவக்குமார், பெரியார் திராவிடர் கழக வேலூர் மாவட்ட செயலாளர் ரா.சிவா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story