கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து, அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஜாபர்சாதிக் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகரத்தில் குப்பைகளை கொட்ட உடனடியாக இடத்தை தேர்வு செய்ய வேண்டும், தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், பெரியார் நகரில் உள்ள சுடுகாட்டில் நகராட்சி குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசுகிறது. இறந்தவர்களின் உடலைகளை புதைக்க வரும்போது மக்கள் பெரும் வேதனை அடையும் நிலை உள்ளது. மக்கள் வரிபணம் வீணாவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள். ஞானசேகரன், செல்வம், காசி கேசவன், ஜோதி, காமராஜ், ரவி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் ரகுமான் நன்றி கூறினார்.