அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்


அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில் வழிபாட்டு முறை குறித்து ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக சிலர் அந்த வழிமுறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை ஒத்துழைப்பு கொடுத்தாலும், சில அலுவலர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர்.

கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை. ஆனால் ஆகம விதிகளை மீறி கோவில் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோவில் நடைமுறையில் ஒரு சில அதிகாரிகள் செய்த தவறால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் உள் விவாகரங்களில் தலையிடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து வருகிற 5-ந் தேதி சென்ைன வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் 5-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


Next Story