பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி


பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 July 2023 2:00 AM IST (Updated: 27 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறில் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் அருணகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இயற்கை பேரிடர், தீ விபத்து ஏற்படும்போது அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை, மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதேபோல் திருவையாறு அருகே திருவாலம் பொழில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் நடந்தது.


Next Story