அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி போராட்ட விளக்க பொதுக்கூட்டம்
அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தி போராட்ட விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் தெற்கு பகுதி பொத்தை பெருமாள் கோவிலில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபருக்கு பட்டா கொடுப்பதை நிறுத்த வேண்டும், இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மேற்படி புறம்போக்கு நிலத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து தோகைமலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்ட விளக்க பொதுக்கூட்டம் கீழவெளியூரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.