ஆரணி நகராட்சி சீர்கேடுகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்
ஆரணி நகராட்சி சீர்கேடுகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.
கண்ணமங்கலம்
அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் ஆரணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எ.அசோக்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் எஸ்.மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 2020-2021-ம் ஆண்டு ஆரணி நகரில் வளர்ச்சி பணிக்காக ரூ.8.35 கோடி கொண்டு வரப்பட்டது.
இதில் ரூ.1.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தை தி.மு.க. அரசு திருப்பி அனுப்பியது. இதனால் ஆரணியில் வளர்ச்சிப்பணிகள் முடங்கியது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை முடக்கியதை கண்டித்தும், ஆரணி நகர வளர்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டதை கண்டித்து, ஆரணி நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், இ.ஜெயப்பிரகாசம், அருகாவூர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு,
மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பி.ஜாகீர்உசேன், வக்கீல் வி.வெங்கடேசன், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் சேவூர் ஜெ.சம்பத்து, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கலைவாணி ஜோதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.