ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கபிலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் நீதி சோழன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். அதற்கான சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story