செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடை செய்ய கோருதல், கடுகை மரபணு மாற்றம் செய்ய தடை செய்தல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக செயலாளர் மூசாகுதின், த.மு.மு.க. பொறுப்பாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கனிவண்ணன், மயிலாடுதுறை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய சங்க தலைவர் வீரராஜ் ஆகியோர் பேசினர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் சுபாஷ் நன்றி கூறினார்.


Next Story