பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் இடது தொழிற்சங்க மையம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருளானந்தம், அனிதா, ராஜன், சிலம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் வீரச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள தொகுப்பு வீடு மற்றும் கூரை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி கான்கிரீட் வீடுகளாக கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story