கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆற்காடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஷ், செயலாளர் சக்கரவர்த்தி, துணை செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் உதவி கலெக்டரின் ஊழியர் விரோத போக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மவுன நிலையை கண்டித்தும், தண்டலம் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வந்தவரை பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்தும் மீண்டும் அதே இடத்தில் வேலை வழங்கி வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story