மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்


மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் ஊரக கிராமப்புற வேளாண் அனுபவ பாடத்திற்காக சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் 75 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில், உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரன் மற்றும் சுமிதா பாரதி ஆகியோரின் வழிகாட்டுதல்படி நேற்று சிவகிரியில் மாணவிகள் இணைந்து மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.


Next Story